ஓநாய் குலச்சின்னம்
Rs. 4,550.00
மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைவு. ஓநாய் குலச்சின்னமானது மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞான குருவாகவும், போர்க் கடவுளாகவும், மேய்ச்சல்நிலக் காவலனாகவும், குலச்சின்னமாகவும் விளங்கிய ஓநாய்கள் ‘புரட்சிகர நடவடிக்கை’கள் மூலம் அழித்தொழிக்கப்பட்டு மேய்ச்சல்நில ஆன்மா சிதைவுற்ற கதை. மேய்ச்சல்நில ஓநாய்களின் வசியத்திற்கு ஆட்பட்டு ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்த்த ஒரு சீன இளைஞனின் பார்வையில் உருவாகியிருக்கும் படைப்பு. 2004ஆம் ஆண்டு வெளியான இந்தச் சீன நாவல் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையானது. இங்கு, புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக் கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள், இறைச்சி உண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை. உன்னைப் பொறுத்தவரை மான்கள்மீது இரக்கம் காட்டவேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை, அப்படித்தானே? மான்களுக்குத் தாகம் ஏற்படும்போது அவை தண்ணீர் குடிக்க நதிக்கு விரைகின்றன. குளிரெடுத்தால் மலையில் ஒரு இதமான இடத்துக்கு ஓடிக் குளிர்காய்கின்றன. ஆனால் புல்? புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாகச் சிதையக்கூடிய மிகப் பரிதாபகரமான உயிர். அதன் வேர்கள் ஆழமற்றவை. அதன் மண் மிக லேசானது. அது நிலப்பிரதேசத்தில்தான் வாழ்கிறது என்றாலும் அதனால் ஓட முடியாது. எவரும் அதன்மீது ஏறி மிதிக்கலாம்; உண்ணலாம்; மெல்லலாம்; கசக்கலாம். குதிரை அதன் பெரும்பரப்பில் மூத்திரம் அடிக்கலாம். அது மணலிலோ, பாறைப் பிளவுகளிலோ முளைத்து வளர்ந்தால் இது இன்னும் குறைந்த நாட்களே உயிர் வாழும். அவை பூப்பதில்லை என்பதால் அவற்றால் தம் விதைகளைப் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புல்லை விட வேறெதுவும் எங்களுடைய இரக்கத்துக்கு உரியதல்ல.
Related products
ஒடிஸி
ஹோமர் (Homer)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (Antoine de Saint-Exupéry)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
மோட்டார் சைக்கிள் டைரிகள்
சே குவேரா (Che Guevara)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
ஆன் ஃப்ராங்க் (Anne Frank)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
மெயின் காம்ஃப்
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
புரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை
செர்கி நிலஸ் (Serki Nilas)
அக்னிச் சிறகுகள்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam)
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
