உங்கள் கவிதைக்கு ஒரு களம்.
சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல.
அவை நினைவுகளையும், உணர்வுகளையும், ஒரு தலைமுறையின் குரலையும் சுமக்கின்றன.
“ஞயம்” – உங்கள் கவிதைக்கான ஒரு களம்.
உங்கள் மனதில் இருக்கும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து, அவற்றை எங்களுடன் பகிருங்கள்.
🗓️ போட்டியின் இறுதித் தேதி
21 செப்டம்பர் 2026
✍️ கருப்பொருள்
தாய் • தாய் மொழி • தாய் நாடு
மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோ, மூன்றையும் இணைத்தோ கவிதை படைக்கலாம்.
தாயின் அன்பு, தாய்மொழியின் பெருமை, தாய்நாட்டின் மீதான பற்று — உங்களைத் தொடும் எந்த உணர்வையும் உங்கள் கவிதையின் வழியே வெளிப்படுத்துங்கள்.
✍️ போட்டியில் பங்கேற்க
இலங்கையர் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
உங்கள் கவிதையை எங்களிடம் சமர்ப்பித்து, உங்கள் படைப்பாற்றலுக்கான ஒரு புதிய களத்தைத் திறவுங்கள்.
போட்டி விதிமுறைகள்
- இப்போட்டியில் இலங்கையர் அனைவரும் பங்கேற்கலாம்.
- ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
- கவிதை தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- சமர்ப்பிக்கப்படும் கவிதை இதற்கு முன்னர் எந்தவொரு போட்டியிலும் பரிசு பெற்றதாகவோ, அச்சு அல்லது இணையவழி வெளியீடு பெற்றதாகவோ இருக்கக்கூடாது.
- சமர்ப்பிக்கப்படும் கவிதை முழுமையாகப் போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
- AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது AI உதவியுடன் எழுதப்பட்ட கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- கவிதை “தாய் • தாய் மொழி • தாய் நாடு” என்ற கருப்பொருளில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
- கவிதை அதிகபட்சம் 15 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.
- நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதும் மாற்ற முடியாததுமாகும்.
- தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள், நன்னூலின் அதிகாரப்பூர்வ இணையத்தளம், சமூக ஊடகங்கள் அல்லது எதிர்கால வெளியீடுகளில் வெளியிடப்படலாம்.
🏆 பரிசுகள்
🥇 முதல் பரிசு: ரூ. 25,000 பெறுமதியான நூல் தொகுப்பு
🥈 இரண்டாம் பரிசு: ரூ. 15,000 பெறுமதியான நூல் தொகுப்பு
🥉 மூன்றாம் பரிசு: ரூ. 10,000 பெறுமதியான நூல் தொகுப்பு
📖 உங்கள் கவிதைக்கு இன்னொரு வாய்ப்பு…
பரிசுகளைத் தாண்டியும், உங்கள் கவிதைக்கு ஒரு நிரந்தரமான இடம் கிடைக்கலாம்.
தரமான படைப்புகள் போதுமான அளவில் கிடைக்கும் பட்சத்தில், நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் 50 சிறந்த கவிதைகள் தொகுக்கப்பட்டு, நன்னூலின் வெளியீடாக ஒரு கவிதைத் தொகுப்பு நூலாக வெளியிடப்படும்.
உங்கள் கவிதை ஒரு புத்தகத்தில் இடம்பெறலாம்.
இன்று நீங்கள் எழுதும் சில வரிகள்,
நாளை பல வாசகர்களின் கைகளில் ஒரு நூலாக இருக்கலாம்.
உங்கள் குரலை எழுதுங்கள்.
உங்கள் கவிதையைப் பகிருங்கள்.
உங்கள் படைப்புக்கு ஒரு களம் — ஞயம்.
✍️ உங்கள் கவிதையைச் சமர்ப்பியுங்கள்
🗓️ போட்டியின் இறுதித் தேதி: 21.09.2026
🏆 வெற்றியாளர்கள் அறிவிப்பு: 27.09.2026
உங்கள் கவிதைகளுக்காகக் காத்திருக்கிறோம்.
— நன்னூல்