Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

ஒரு கூர்வாளின் நிழலில்

Rs. 2,376.00

Only 3 left in stock
Book Title: ஒரு கூர்வாளின் நிழலில் (Oru Koorvaazhin Nizhalil)
Author: தமிழினி (Thamizhini) Categories: , , Publisher: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages: 272
Format: Paperback
ISBN: 9789352440184
SKU: BK-TA-PB-10549

-தீரமும் போர்க்குணமும் பொறுப்புணர்வுமுள்ள ஒரு விடுதலைப் போராளியின் சுயசரிதம் இது. லட்சக்கணக்கான மக்களின் சுதந்திர வேட்கையால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் போராட்டம் அம்மக்களையே காவு வாங்கியது. ஒரு இலட்சியத்தின் முடிவு துயரார்ந்ததாகத்தான் இருக்கும் என்பதை இந்நூலில் காட்டிச்செல்கிறார் தமிழினி. போருக்குள் பிறந்து, வாழ்ந்து இன விடுதலைக்காக ஈகியரான தலைமுறையின் ஆற்றாமையும் குற்றவுணர்வையும் மானுட நேசத்தையும் இச்சரிதத்தில் தரிசிக்க முடியும்.

அரசியல் துறைப் போராளியான தமிழினி தன் கண் முன்னேயே தமது மக்களும் தலைவர்களும் வீழ்ந்ததைக் கொந்தளிப்பும் கையறுநிலையுடனும்
காட்சிப்படுத்தியிருக்கிறார். தான் சார்ந்திருந்த இயக்கம் ஆயுதங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்களைக் கைவிட்ட கோரத்தையும் ஆழ்ந்த குற்றவுணர்வுடன் தமிழினி இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

ஒருவிதத்தில் இந்நூல் துயரார்ந்த ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லத் தோன்றுகிறது.