Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

போர் நிலத்துப் பெண்

Rs. 700.00

In stock

ஈழப்போரின் கதைகள் பன்முகங் கொண்டவை. இது போர்க்களத்தில் இரண்டு கண்களையும் ஒரு காலையும் இழந்த ‘சுடர்’ என்ற பெண் போராளியின் தன்வரலாறு. இந்தத் தன்வரலாற்றில், தன்னுடைய கதையையும் தன்னுடைய காலத்தின் கதையையும் அதன் வழியாக ஈழமண்ணில் நிகழ்ந்த மாபெரும் துயரக் கதைகளையும் சிங்கள இனவாத ஒடுக்குமுறை வெறியையும் சொல்கிறார் ‘சுடர்’ சசிகலா.

எதிர்பாராத சம்பவங்களால் ஆனதே பெரும்பாலானோருடைய வாழ்க்கை. சுடரின் வாழ்க்கையும் அப்படியானதே. எதிர்பாராத சம்பவங்கள்தான் சசிகலா என்ற சின்னஞ்சிறு குழந்தையை, அந்தச் சிறுமியை, அந்த வளரிளம் பெண்ணை, விடுதலைத் தாகமுடைய போராளியைக் கால வெளியில் போட்டுலைத்துள்ளது. ஆனாலும் ஓயாது சுழன்றடித்த பெரும்புயல்களிலெல்லாம் அணைந்து விடாமல் நின்றெரிகிறது இந்தச் ‘சுடர்’. இந்தக் கதையைப் படிக்கும்போது நம்முடைய உடலும் ஆன்மாவும் பதறுகிறது. அது போர் நிகழ்ந்த நிலமல்லவா! பல லட்சம் ஈழத் தமிழ் மக்களின் கதைகள் இப்படித்தான் என்பதை ‘போர் நிலத்துப் பெண்’ சொல்கிறது.