அணிலாடும் முன்றில்
Rs. 1,320.00
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா… என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் – அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!
Related products
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
ஜான் கிரே (John Grey)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
கழிவறை இருக்கை
லதா (Latha)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன் (Geeta Ilangovan)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
பார்வை வழிப் பயணம்
லதா (Latha)
மண்ட பத்தரம்
கோபிநாத் (Gopinath)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
சிங்களப் பண்பாட்டிலிருந்து
என். சரவணன் (N.Saravanan)
