யுத்தங்களுக்கிடையில்
Rs. 924.00
யுத்தங்கள் பற்றிய பேச்சு இருந்தாலும் இது யுத்தங்களை மையமாகக்கொண்ட நாவல் அல்ல. இது அடிப்படையில் ஒரு குடும்பத்தின் கதை. விரிவானதும் சிக்கலானதுமான உறவுச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அறுபது ஆண்டுக் கதை. வியப்பும் வேதனையும் விரக்தியும் பரவசமும் கொண்ட வாழ்வு காலத்தினூடே பயணிக்கிறது. காலமே அதை வழிநடத்திச் செல்கிறது. மாற்றங்கள் அவை நடக்கும் காலத்தில் முழுமையாக உணரத்தக்கவையாக இல்லை. மாற்றங்களின் வெளிப்பாடுகளை அவற்றின் வேர்களோடு தரிசிக்கச் செய்வது புனைவின் பெரும்கொடை. அந்த அற்புதமான அனுபவத்தை இந்த நாவலில் பெறலாம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கும் கதை சற்றே உன்னிப்பாகக் கவனிக்கும்போது ஒரு காலகட்டத்தின் கதையாகவும் மனிதர்களின் கதையாகவும் வாழ்க்கையும் உறவுகளும் மாறிவரும் விதம் குறித்த தரிசனமாகவும் விகாசம் பெறுவதை உணரலாம். கதை நிகழும் களம் இருபதாம் நூற்றாண்டின் அறுபது ஆண்டுகள். உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்புகளும் மாபெரும் மாற்றங்களும் நிகழ்ந்த காலகட்டம். காலனி ஆதிக்கத்தின் தாக்கமும் அதிலிருந்து விடுபடும் திமிறலும் நிரம்பிய இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய வாழ்வு நவீனத்துவத்துடனான தன் போராட்டத்தையும் மேற்கொண்டது. இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வையும் குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் மதிப்பீடுகளையும் பெருமளவில் மாற்றி அமைத்தது. வேரிலிருந்து முற்றாக வெட்டிக்கொண்ட மாற்றங்களும் வேர்களின் தன்மைகளை உள்வாங்கிய மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தின் பெரும் சலனங்களை ஒரு குடும்பத்தின் பின்னணியில் வைத்து நமக்குக் காட்டுகிறது அசோகமித்திரனின் கலை. பிரகடனங்கள் அற்ற இயல்பான வெளிப்பாடாக அமைந்துள்ளதே அசோகமித்திரனின் கலையின் சிறப்பு. அந்தச் சிறப்பை இந்த நாவலிலும் உணரலாம். – அரவிந்தன்
Related products
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பொய்மான் கரடு
கல்கி (Kalki)
சோலைமலை இளவரசி
கல்கி (Kalki)
இவான்
விளாதீமிர் பகமோலவ் (Vladimir Bogomolov)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
நிலவறைக் குறிப்புகள்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
குற்றமும் தண்டனையும்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
இரட்டையர்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
அன்னா கரீனினா
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
அயலான்
ஆல்பெர் காம்யு (Albert Camus)
ஜே. ஜே. சில குறிப்புகள்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
