Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

நினைவுகளே எங்கள் கேடயம்

Rs. 1,500.00

Only 2 left in stock
Book Title: நினைவுகளே எங்கள் கேடயம் (Ninaivukale Engal Kedayam)
Author: என். செல்வராஜா (N. Selvarajah) Categories: , , , Publisher: குமரன் புத்தக இல்லம் (Kumaran Book House)
Pages: 442
Format: Paperback
ISBN: 9786246164638
SKU: BK-TA-PB-10632

நினைவுகள் எங்கள் கேடயம் – நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பதிவுகள்

இந்தத் தொகுப்பு 03.01.1974 இல் ஆரம்பமாகி, 10.01.1974 அன்று பாரிய அரச வன்முறையின் விளைவாக, 11 தமிழ் மக்களின் உயிர்ப் பலியுடன் முடிவுக்கு வந்த நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றியதாகும்.

2024இல் ஐம்பதாண்டுகளைக் கடந்து செல்லும் இம்மாநாட்டின் நினைவலைகளைத் தேக்கி, எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்திவைக்கும் பாரிய தனிநபர் முயற்சி இதுவாகும். மாநாட்டின் பின்புலம், உள்வீட்டு இழுபறிகள், மாநாட்டு நிகழ்ச்சிகள், 10ஆம் திகதிக் குழப்பம், அவை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகள், இம்மாநாடு தொடர்பாகப் புத்திஜீவிகளினால் எழுதப்பட்ட அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள் என இவ்வாவணத் தொகுப்பு நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மீளக் கண்முன் நிறுத்துகின்றது.