Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

புயலடித்த தேசம்

Rs. 500.00

In stock
Book Title: புயலடித்த தேசம் (Puyaladiththa Thesam)
Author: முல்லை முகுந்தினி (Mullai Mukunthini) Categories: , Publisher: ஜீவநதி வெளியீடு (Jeevanathi Veliyeedu)
Pages: 68
Format: Paperback
ISBN: 9786246837501
SKU: BK-TA-PB-10584

செல்வி. வை. முருந்தினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்பாகப் பயின்றவர். நவீன இலக்கியங்களில் பயிற்சியுடையவர். ஏலவே ‘இடர் சுமந்த மேனியர்’ என்ற நாவலின் மூலம் ஈழத்துத் தமிழ்ப் படைப்புலகிற்கு அறிமுகமானவர். இப்போது கவிதை நூற் படைப்பாகம் ஒன்றினூடே தன்னுடைய பிறிதொரு படைப்பாளுமையை வெளிப்படுத்துகிறார்.

மனிதன், தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கிறான். அவற்றுள் ‘கவிதை’ என்ற வடிவம் தலைசிறந்த ஒரு வடிவம். வெறுமனே படிப்பினாலும் பயிற்சியினாலும் மட்டும் கவிஞர்கள் உருவாவதில்லை. ‘கவியாற்றல்’ என்பது இயல்பாக ஊற்றெடுக்கும் ஒரு பிரவாகம். பயிற்சிகள், கவிதைகளை மெருகூட்டலாம். முருந்தினியின் கவிதைகளில் ஒருவித முதிர்ச்சியை அவதானிக்க முடிகிறது.

– பேராசிரியர் கி. விசாகரூபன்