Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

அம்மாவின் இசைக்குறிப்பு

Rs. 1,120.00

Sold Out
Book Title: அம்மாவின் இசைக்குறிப்பு (Ammavin Isaikkuripu)
Author: ஆண்டன் பெனி (Anton Benny) Category: Publisher: வாசகசாலை பதிப்பகம் (Vaasagasalai Publications)
Format: Paperback
SKU: BK-TA-PB-10182

ஒரு கவிதையை எழுதி முடிக்கும் வரை என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. ஆக, தற்கொலையைத் தவிர்க்கவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த மழையை நான் விரும்புகிறேன், என்னை சில்லிட நனைக்கிறது. இந்த மழையை நான் விரும்புகிறேன், என் பாதங்களின் மேலேறுகிறது. இந்த மழையை நான் விரும்புகிறேன், என் தோளேறுகிறது. இந்த மழையை இப்போது நான் வெறுக்கிறேன், அது என் நாசித்துவாரங்களை அடைக்கிறது. எல்லா அன்பும், எல்லா அனாதரவுகளும் ஓரிடத்தில் தொடங்கி ஓரிடத்தில் முடிவடைகின்றன. அனாதரவுகள் அப்படி முடியட்டும். ஆனால் ஒருபோதும் அன்பை இழந்துவிட மனமில்லை என்கிற தவிப்பையே இங்கு இறக்கி வைத்திருக்கிறேன். – ஆண்டன் பெனி