Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

நிலா பார்த்தல்

Rs. 490.00

Only 2 left in stock
Book Title: நிலா பார்த்தல் (Nila Paarthal)
Author: கல்யாண்ஜி (Kalyanji) Category: Publisher: சந்தியா பதிப்பகம் (Santhiya Pathipagam)
Pages: 64
Format: Paperback
SKU: BK-TA-PB-10652

நண்பனின் அறையிலிருந்து
திரும்பும் போது ஏற்பட்ட
திடீர் வெறுமையில்,
நிச்சயமற்ற தெருக்களில்
நீண்டநேரம் நடந்து
வீட்டைத் தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது.

மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத் தேடி
இருட்டுக்குள் துளாவி
கைப்பிடிச் சுவரில்
முகம் பதித்த போது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை.

தானாக இப்படித்
தட்டுப்பட்டது தவிர
நிலாப் பார்க்க என்றுபோய்
நிலா பார்த்து நாளாயிற்று.