Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

கைப்பிடி அன்பு

Rs. 600.00

Only 3 left in stock
Book Title: கைப்பிடி அன்பு (Kaippidi Anpu)
Author: சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan) Categories: , Publisher: ஜீவநதி வெளியீடு (Jeevanathi Veliyeedu)
Pages: 124
Format: Paperback
ISBN: 9786246837624
SKU: BK-TA-PB-10541

நாம் ஆரவாரங்களிடையே வாழ்வோர், மிக அபூர்வமாக சில விநாடிகள் மெளனம் நிலவக்கூடும் மற்றும்படி இரைச்சல் களிடையே எம் வாழ்வு நகர்கிறது.

‘ஓசைகளால் நிரம்பியதல்ல வாழ்க்கை
ஒலிகள்தான் வாழ்க்கை என்றால்
மெளனம் கடைசி வரையிலும்
உங்களிடம் பேசிவிட முடியாது.’

பாடுபொருளைப் பொறுத்தவரையில் சங்கரி யின் கவிதை ஒரு திருப்புமுனை எனலாம். இயற்கையை தாய்மண்ணை இறைவனை விடுதலையை பாடிய கவிதைகள் சங்கரியோடு உள்முகமாகத் திரும்புகிறது.
போருக்கு பிந்திய காலத்தில் நமது ஊர், கிராமம், மனிதர் எல்லாம் மாறியுள்ள நிலைமையைச் சங்கரி படம் பிடித்துக் காட்டுகிறார்.

‘இருட்டு என்பது வாழ்வின் உறக்கம்
வெளிச்சம் என்பது வாழ்வின் விழிப்பு’

இது சங்கரி அடையும் தெளிவு! ஞானம்.
தத்துவம் என்பது ‘மெய்யுணர்தல்’, ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பார் வள்ளுவர். தொகுதியில் தத்துவ வீச்சுக்கு பஞ்சமில்லை.

சங்கரியின் எழுத்துப் பணி தொடர்க..

— கவிஞர் சோ. பத்மநாதன்