நேயத்தே நின்ற
Rs. 1,650.00
எப்போதும் உன் மீது காதலில் கசிந்துருகிக் கொண்டே இருக்கிறேன்’ போன்ற பாவனைகளை விட்டொழியுங்கள். காதல் ஒருபோதும் அதன் உச்சத்தில் திகழ்ந்துகொண்டே இருக்காது; அவ்வப்போது வரும், போகும் என்ற அளவிலேயே காதல் இருக்கும். ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்றால், ‘ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் 24 மணி நேரமும் உன்னைக் காதலித்துக் கொண்டிருப்பேன்’ என்று பொருளல்ல. ஆனால் நாம், ’24 மணி நேரமும் உன்னைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்று வெளிக்காட்டிக்கொண்டே இருக்க விரும்புகிறோம். ஏனெனில் அஞ்சுகிறோம். இந்தக் காதலில் இருந்து அவர்கள் பின்வாங்கி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். நீ என்னை விட்டுப் போகவே கூடாது என்பதற்காக, ”நான் உன்னை எத்தனை எத்தனை காதலிக்கிறேன் பார்!” என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறோம். அதோர் பாவனை என்று நமக்கே தெரிந்தும் இருக்கிறது. பாவனையின் மூலமாக அவர்களைத் தக்கவைத்து விடமுடியும் என்று நம்புகிறோம். இறுதியில் நாம் காட்டிய பாவனைதான் நிஜம்: ‘நான் உன்னை எந்நேரமும் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன்’ என்று நம்பவும் ஆரம்பித்து விடுகிறோம். ‘நீதான் அப்படி என்னைக் காதலிக்கவில்லை’ என்று கோபப்படத் தொடங்குகிறோம். பாவனைகளை விட்டொழியுங்கள். எந்நேரமும் காதல் கசிந்துருகாது என்பதை உணருங்கள். சில பொழுது காமம் பொங்கும், சில பொழுது அன்பு பெருகும், சில பொழுது சும்மா பேசிக்கொண்டிருக்கத் தோன்றும். சில பொழுது வெறுப்பும் கோபமும் மட்டுமே இருக்கும், சில பொழுது எந்த உணர்வுமே இருக்காது. வெறுமையாக இருக்கும். வெறுமையான பொழுதுகளை, ‘என்னாச்சு, என்னாச்சு? என சீண்டாமல் இருக்கப் பழகும்போதுதான் ஒரு காதல் அதன் தன்னியல்பில் இருந்து மாறாமல் இருக்கும். * யாத்திரி
Related products
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
காத்திருங்கள் காதலிப்போம்
மதுரை இராமகிருஷ்ணன் (Madurai Ramakrishnan)
மிளிர்மன எழில்மதி
நர்சிம் (Narsim)
ஏழாம் வானத்து மழை
மானசீகன் (Maanaseegan)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
காதல் கடிதம்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
மடை திறக்கும் மௌனம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
மாலை மலரும் நோய்
இசை (Isai)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
