Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

அரூப நிழல்கள்

Rs. 750.00

In stock
Book Title: அரூப நிழல்கள் (Aroopa Nizhalgal)
Author: சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan) Categories: ,
Pages: 120
Format: Paperback
ISBN: 9786249947504
SKU: BK-TA-PB-10542

ஒட்டுமொத்தமாகப் பெண்ணின் வாழ்வை உள்ளங்கையில் குவித்து வைத்துக் கொண்டு எங்கெங்கோ எதையெதை தட்டிச் சீராக்க வேண்டும் உளி கொண்டு நேராக்க வேண்டும் என்கிற வாழ்வியல் கடமையை இவரது கவிதைகள் செய்கின்றன. அதற்குக் காரணம் சங்கரி ஈராயிரம் ஆண்டு பெண் வாழ்க்கைக்குள் புகுந்து, உணர்ந்து தெளிந்திருக்கிறார் என்பதே. அவர்கள் பேசாத வார்த்தைகளை சங்கரி பேசுகிறார். அவர்கள் கேட்காத கேள்விகளை சங்கரி கேட்கிறார். அவர்கள் உணராத ரௌத்திரத்தை சங்கரி உணர்கிறார். அதனால்தான் உரக்கச் சொல்கிறார் “வீட்டுக்கொரு பாரதி வேண்டும்” என்பதாக.

“அரூப நிழல்கள்” எனும் தலைப்பே படிமங்களின் பன்முனை அடுக்காக இருக்கிறது. நிழல் என்பதே அரூபம்தான். ஏதோ ஒரு ரூபத்தின் படிமம்தான் நிழல். ஆனால் நிழல் என்பதே அரூபம், அப்படியானால் நிழல் எதைக் குறிக்கிறது? ஏதோ ஓர் இருப்பைக் குறிக்கிறது. ஏதோ ஒன்றின் இயக்கத்தைக் குறிக்கிறது. ஏதோ ஒன்றின் இயக்கின்மையையும் குறிக்கின்றது.

வெளிச்சம் அந்த ஒன்றின் நிறைவின்மையை, குறையை, முழுமையின்மையை இன்னமும் நுணுக்கமாகக் காட்டும். அப்படிக் காட்டுவதைக் கவிதை உணர்வில் ஏற்றிக் காட்டியிருக்கிறார் சங்கரி சிவகணேசன்.

சமூகத்தை உலுக்கும் சங்கரியின் குரல் கவிதைகள் வழியாக எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும். அது திசைகளின் குரலாகும். விடியலின் குரலாகும். பெண்களின் குரலாகும். அதன் மூலம் சங்கரி உலகப் பெண்மணி ஆகிறார். இதோ உள்ளூரில் இருந்து நிமிர்கிறார் சங்கரி எனும் விஸ்வரூபி. எப்போதும் என் அட்சதைகள் இன்னும் வெல்லுங்கள் சங்கரி.

அன்புடன்
ஆண்டாள் பிரியதர்ஷினி