கரிகால தேசத்துக் காதலி
Rs. 800.00
பிரபா அன்பு ஒரு தமிழீழப் போராளியாகக் களத்திலும் படைப்பாளியாக எழுத்திலும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
“ஈழம் என்பது இன்னும் ஆறாத பெருங்காயமாக இருக்கிறதென்பதையும்
அந்த மண்ணின் வலியையும் பெண்ணின் வலியையும் ஒரே சேரப் பேசுவதே
பிரபா அன்பின் இந்தக் கவிதைகள்”
“நாளும் காதலித்தேன்
ஆனால் எனக்குள்
பட்டாம்பூச்சிகள்
பறக்கவில்லை
என் முன்பாக
தோட்டங்களே பறந்தன”
என்கிறார் இந்தக் “கரிகால தேசத்துக் காதலி”.
பிரபா அன்பின் வரிகளில் எரிந்து கருகிய பனை மரங்களும் அவற்றில் வெறுமையாகச் சிதைந்து கிடக்கும் தூக்கணாங்குருவிக் கூடுகளும் வந்து வந்து திரும்பும் நந்திக்கடல் அலைகளும் காற்றில் விளக்கேற்றும் செங்காந்தள் மலர்களும் கண்முன் விரிகின்றன.
“நினைவுகளை மீட்டலாம் மீள முடியுமா” என்று கேட்பார் கவிஞர் சேரன். இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தபோது எனக்கும் அப்படித்தான் கேட்கத் தோன்றியது.
பழநிபாரதி
திரைப்பட பாடலாசிரியர்
கவிஞர்.
Related products
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
இரண்டு கிழவர்கள்
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
பலவீனமான இதயம்
க்ரிஷ் பாலா (Krish Bala)
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
மௌனத்தின் மத்தாப்பு
ரசூல் முகைதீன் அப்பாஸ் (Rasool muhaideen Abbas)
கோயில் யானையின் சிறுவன்
சீனு ராமசாமி (Seenu Ramasamy)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சேர்ந்து பருகிய நூறு காப்பிகள்
ஜாமி (Jaamee)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
கார்கால அணங்கு
ரேவந்தி ஆழிசை (Revanthi Aazhisai)
