மை தீர்ந்த பேனாவின் மறுபக்கம்

Rs. 1,188.00

In stock
Book Title: மை தீர்ந்த பேனாவின் மறுபக்கம் (Mai Theerntha Penavin Marupakkam)
Author: ஹரிஷோபன் (Harishoban) Categories: ,
Pages: 120
Format: Paperback
ISBN: 9789349765696
SKU: BK-TA-PB-10509

கவிதை, சொற்களால் நெய்யப்படும் மனித மனத்தின் மிக மிருதுவான திரைச்சீலை. கவிதையின் ஒவ்வொரு வரியும் சொல்லிக்காட்ட முடியாத ஒரு வலியையும், உணர்வையும், சில சப்தங்களையும் சில நிசப்தங்களையும் அடக்கிடயிருக்கும். அப்படி கவிஞர் ஹரிஷோபனின் ‘மை தீர்ந்த பேனாவின் மறுபக்கம்’ எனும் கவிதைத் தொகுப்பும் பல உணர்வுகளைச் சுமந்து வந்து நம் முன் நிற்கிறது.

இவரின் சில கவிதைகள் ஒருதலைக் காதலின் வலியையும், அதில் இருக்கும் சுகத்தினையும் நம் முன் விரிக்கின்றன. ஒருதலைக் காதலியிடம் சொல்ல நினைத்த அத்தனையும் நம்முன் கவிதைகளாக வைக்கிறார் கவிஞர். சில கவிதைகளில் இவர் பிரயோகப்படுத்தியிருக்கும் ‘நுதல், ஆர்கலி, மிடறு’ போன்ற சங்க வார்த்தைகளின் தூயம் கவிஞர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்தொகுப்பின் வழி, காதல் மட்டுமல்லாமல் பல உணர்வுகளோடு தன் எண்ணங்களையும் கடத்தியிருக்கிறார்.
–க.சரண்பாபு